Friday, 13 May 2016

அலைக்கற்றை ஒதுக்கீடு மீதான சேவை வரியால் தொலைதொடர்பு தொழில் பாதிக்கும்: அசோசம் கவலை

கோப்புப் படம்.


அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தின் மீதும் 15% சேவை வரிவிதிக்கப்படுவதான மத்திய அரசு திட்டத்தினால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பான அசோசம் கவலை தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு, இதனை பொருளாதார நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது, அதனால் வரிவிதிப்புக்கு இதனை உட்படுத்த முடியாது, எனவே அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கு சேவை வரி விதிப்பது வளரும் நாடுகளுக்கு நல்லதல்ல. இது பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அசோசம் கருதுகிறது.

அசோசேம் இது பற்றிய தங்கள் கவலைகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதமாக எழுதியுள்ளது, “அலைக்கற்றைக்கு சேவை வரி விதிகப்பட்டால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் சாமானிய மக்களே சேவைவரியினால் அதிகம் பாதிக்கப்படுவர்.

ரூ.30,000 கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் மீது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வரிவிதிப்பது (முதல் ஆண்டே) இந்நிறுவனங்களை நிதிநெருக்கடிக்குக் கொண்டு தள்ளிவிடும்.

இது 2011-ம் ஆண்டின் தேசிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு எதிரானது. அந்தக் கொள்கையின் படி அனைவருக்கும் தொலைத்தொடர்பு சேவை, குறைந்த கட்டணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதைய சேவை வரி முடிவினால் நிச்சயம் சாதாரண மனிதன் முதல் தொலைத் தொடர்புத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அனைத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் மீதான சேவை வரி என்பதற்குப் பதிலாக தனியார் ஆபரேட்டர்களுக்கிடையே நடைபெறும் ஸ்பெக்ட்ரம் தொலைத் தொடர்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சேவை வரி விதிக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் கட்டனத்தை அதிகரிப்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்யக்கூடிய பகுதிகளையும் பாதிக்கும், இதனால் புதிய தொழில்நுட்பங்கள், 4ஜி போன்ற நெட்வொர்க்குகளைக் கொண்டு வருவது சவால் நிரம்பியதாகி விடும்.

மேலும், இந்த சேவை வரிவிதிப்பினால் எதிர்கால ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சில நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் போகக்கூட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே இந்திய தொலைத் தொடர்பு தொழிற்துறை கடன் பளுவினாலும், அதிக வரிகள், லாபம் குறைவான வர்த்தகம் மற்றும் அதிக அலைக்கற்றை விலைகள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கூடுதல் வரிகள் விதித்தால் நிறுவனங்கள் நேரடியாகக் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்படும் நாட்டு மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அசோசம் தனது கடிதத்தில் கவலை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment