விட்டமின் சி உள்ள உணவுகள் :
வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற எல்லா சிட்ரஸ் வகை பழங்களிலும், தக்காளி, கீரை வகைகள், புரோக்கோலி ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
விட்டமின் சி குறைவதால் உண்டாகும் பாதிப்புகள் :
விட்டமின் சி குறைப்பாட்டினால், தோல் வறண்டு போகும். பற்கள், ஈறுகள் பாதிக்கும். கொலாஜன் உற்பத்தியாகாது. இதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும். தீவிரமான விட்டமின் சி குறைபாட்டினால், ஸ்கர்வி நோய் உண்டாகும். விட்டமின் சி யின் நன்மைகள் : ஜலதோஷம் : விட்டமின் சி உள்ள உணவுகளை குளிர்காலத்த்ல் உண்ணும்போது, ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை தடுக்கலாம், இவை நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும்.
உயர் ரத்த அழுத்தம் :
அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் விட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறையும்.
மன அழுத்தம் :
மன மற்றும் வேலை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தூண்டப்படும் ஹார்மோன்களை சமன் செய்து மனதை அமைதிப்படுத்தும். நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கும் நிவாரணியாக செயல்படுகிறது
கொழுப்பை குறைக்கும் :
கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை வேகமாக தூண்டும். இதனால் கொழுப்பு கரைந்து சக்தியாக மாற்றப்படும். கொலாஜன் உற்பத்தியை தூண்டும் : கொலாஜன் நம் உடலுக்கு வடிவம் தருகிறது. இளமையாகவும் , உடல் நெகிழ்வுத்தன்மையுடனும்ம் இருப்பதற்கு கொலாஜன் என்ற புரதமே காரணம். கொலாஜன் உற்பத்திக்கு விட்டமின் சி அத்தியாச தேவையாகும்.
ஆரோக்கியமான சருமம் :
அன்றாட வாழ்வில் விட்டமின் சி யை எடுத்துக் கொண்டால், இளமையான ஆரோக்கியமான தேகத்தை பெறலாம். மேலும் காயங்களை விரைவில் ஆற்றும் குணம் கொண்டது. உடலில் இரும்பு சத்தை உட்கிரகிக்க விட்டமின் சி இன்றியமையாததாகும்.