Tuesday 14 June 2016

தூய நீரை தேடி முற்றுகையிடும் யானைகள்: ஆறுகள் மாசடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் தண்ணீருக்காக முகாமிட்டுள்ள யானைகள்.

குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் தண்ணீருக்காக முகாமிட்டுள்ள யானைகள்.

தூய்மையான தண்ணீர் தேடி குன்னூர் அருகே உள்ள ரன்னி மேடு ரயில் நிலையத்தை யானை கள் முற்றுகையிட்டுள்ளன. ஆறு கள் மாசடைந்ததால் விலங்குக ளுக்கு நீர் கிடைக்காமல் அவை புலம் பெயரத் தொடங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதியில் பலாப்பழ சீசனை யொட்டி பலாப் பழங்களை உண்ண யானைகள் கூட்டம் இப்பகுதிகளில் முற்றுகையிடும். கடந்த சில நாட்களில் குட்டி உட்பட 5 யானைகள் மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதிகளில் உலா வருகின்றன. இந்த யானைகள் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு வராமல், வனத்துறையினர் கடந்த ஒரு மாதமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குட்டியை விட்டு பிரிந்ததால், தாய் யானை, நேற்று குன்னூர் மலை ரயில் பாதையில் முகாமிட்டு, மண்வாரி வீசியும், செடிகளை பிடிங்கி வீசியும் ஆக்ரோஷத்துடன் உலா வந்ததால் மலைப்பாதையில், ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

நெஸ்ட் அமைப்பின் அறங் காவலர் சிவதாஸ் கூறும்போது, ‘மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே செல்லும் ஆறுடன், காட்டாறுகள் இணைந்து பயணித்து பவானி ஆற்றை அடைகிறது. வனங்களில் உள்ள விலங்குகளுக்கு இந்த ஆறுகள் தான் நீராதாரமாக விளங்குகின்றன.

ஆனால், துரதிஷ்டவசமாக குன்னூர் நகரில் சேறும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலக்கிறது. கழிவுகளின் சங்கமமாக இந்த ஆறு மாறியுள்ளதால், யானைகள் இந்த நீரை பருகுவதில்லை. இதனால் தூய நீரை தேடும் யானைகள், ரன்னிமேடு ரயில் நிலையத்துக்கு வருகின்றன. அங்கே தூய நீர் தேங்கியிருக்கும் குட்டையை முற்றுகையிடுகின்றன’ என்றார்.

தண்ணீருக்காக கடந்த 3 நாட் களாக ரன்னிமேட்டில் முகாமிட் டுள்ள யானைகளை பட்டாசு வெடித்து துரத்த வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அப்போது, அவர்களை யானைகள் துரத்தியதால் வனத்துறையினர் முயற்சி வீணானது.