Showing posts with label General Knowledge in Tamil. Show all posts
Showing posts with label General Knowledge in Tamil. Show all posts

Saturday, 23 July 2016

பல மூலப்பொருட்களை கையாளும் 3டி பிரின்டர்




முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது செராமிக் போன்ற ஏதாவது ஒரு மூலப் பொருளை வைத்துத்தான் புதிய பொருட்களை வடிவமைக்கும். பல நிறங்களில் பொருட்களை உருவாக்க வேண்டும் என்றால் கூட, முப்பரிமாண அச்சியந்திரங்களின் அளவு பெரியதாக இருக்கும்; விலையும் கூடுதலாக இருக்கும். ஆனால், பிரான்சை சேர்ந்த, 'போலன்' என்ற 3டி அச்சு இயந்திர நிறுவனம் 'பாம்' என்ற புதிய 3டி பிரின்டரை உருவாக்கியிருக்கிறது. இது அளவில் சிறியதாகவும், விலை குறைந்ததாகவும் இருந்தாலும், பல மூலப் பொருட்களை கொண்டு புதிய பொருட்களை அச்சிடும் திறன் படைத்ததாக இருக்கிறது. சிலிக்கான், பி.எல்.ஏ., கம்போசைட்டுகள் மற்றும் மரத்துாள் நிறைந்த பி.எல்.ஏ., ஆகிய நான்கு மூலப் பொருட்களை கொண்டு பாம் பிரின்டரால் புதிய பொருட்களை வார்த்து தர முடியும்.அதுமட்டுமல்ல, 40 மைக்ரான் அளவுக்கு நுணுக்கமான வடிவங்
களைக்கூட பாம் 3டி பிரின்டரால் வார்க்க முடியும். 6 லட்சம் ரூபாய் விலைஉள்ள பாம் 3டி பிரின்டர், பாரிஸ் நகரில் கடந்த வாரம் அறிமுகம் ஆனது.



Friday, 15 July 2016

ஸ்மார்ட் சிட்டிஸ்

"ஸ்மார்ட் சிட்டிஸ்" என்பதற்க்கு காரணிகளாக கீழ் காண்பவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக 43 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
  1. நீர்-ஆளுமை
  2. மின்சாரம்
  3. கழிப்பிட வசதி
  4. திடக்கழிவு மேலாண்மை,
  5. திறமையான நகர்ப்புற இயக்கம்
  6. பொது போக்குவரத்து
  7. வலுவான இன்டர்நெட் இணைப்பு
  8. மின்-ஆளுமை
  9. குடிமக்களின் பாதுகாப்பு 


முதற் கட்டமாக தேர்ந்தெடுக்கப்ட்ட நகரங்கள்

#
மாநிலம் / யூனியன் பிரதேசம்
நகரம்
1
ஒடிசா
புவனேசுவர்
2
மகாராஷ்டிரா
புனே
3
ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்
4
குஜராத்
சூரத்
5
கேரளா
கொச்சி
6
குஜராத்
அகமதாபாத்
7
மத்தியப் பிரதேசம்
ஜபல்பூர்
8
ஆந்திரப் பிரதேசம்
விசாகப்பட்டினம்
9
மகாராஷ்டிரா
சோலாப்பூர்
10
கர்நாடக
தாவங்கரே
11
மத்தியப் பிரதேசம்
இந்தூர்
12
புது தில்லி
புது தில்லி
13
தமிழ் நாடு
கோயம்புத்தூர்
14
ஆந்திரப் பிரதேசம்
காக்கிநாடா
15
கர்நாடக
பெலாகவி
16
ராஜஸ்தான்
உதய்பூர்
17
அசாம்
குவஹாத்தி
18
தமிழ்நாடு
சென்னை
19
பஞ்சாப்
லூதியானா
20
மத்தியப் பிரதேசம்
போபாலில்


இரண்டாம் கட்டமாக தேர்ந்தெடுக்கப்ட்ட நகரங்கள்


#
மாநிலம் / யூனியன் பிரதேசம்
நகரம்
1
உத்தரப் பிரதேசம்
லக்னோ
2
பீகார்
பகல்பூர்
3
மேற்கு வங்க
நியூ டவுன், கொல்கத்தா
4
அரியானா
பரிதாபாத்
5
சண்டிகர்
சண்டிகர்
6
சத்தீஸ்கர்
ராய்பூர்
7
ஜார்க்கண்ட்
ராஞ்சி
8
இமாசலப் பிரதேசம்
தர்மசாலா
9
தெலுங்கானா
வாரங்கல்
10
கோவா
பனாஜி
11
திரிபுரா
அகர்தலா
12
மணிப்பூர்
இம்பால்
13
அந்தமான் மற்றும் நிகோபார்
போர்ட் பிளேர்