Saturday, 23 July 2016

பல மூலப்பொருட்களை கையாளும் 3டி பிரின்டர்




முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது செராமிக் போன்ற ஏதாவது ஒரு மூலப் பொருளை வைத்துத்தான் புதிய பொருட்களை வடிவமைக்கும். பல நிறங்களில் பொருட்களை உருவாக்க வேண்டும் என்றால் கூட, முப்பரிமாண அச்சியந்திரங்களின் அளவு பெரியதாக இருக்கும்; விலையும் கூடுதலாக இருக்கும். ஆனால், பிரான்சை சேர்ந்த, 'போலன்' என்ற 3டி அச்சு இயந்திர நிறுவனம் 'பாம்' என்ற புதிய 3டி பிரின்டரை உருவாக்கியிருக்கிறது. இது அளவில் சிறியதாகவும், விலை குறைந்ததாகவும் இருந்தாலும், பல மூலப் பொருட்களை கொண்டு புதிய பொருட்களை அச்சிடும் திறன் படைத்ததாக இருக்கிறது. சிலிக்கான், பி.எல்.ஏ., கம்போசைட்டுகள் மற்றும் மரத்துாள் நிறைந்த பி.எல்.ஏ., ஆகிய நான்கு மூலப் பொருட்களை கொண்டு பாம் பிரின்டரால் புதிய பொருட்களை வார்த்து தர முடியும்.அதுமட்டுமல்ல, 40 மைக்ரான் அளவுக்கு நுணுக்கமான வடிவங்
களைக்கூட பாம் 3டி பிரின்டரால் வார்க்க முடியும். 6 லட்சம் ரூபாய் விலைஉள்ள பாம் 3டி பிரின்டர், பாரிஸ் நகரில் கடந்த வாரம் அறிமுகம் ஆனது.



No comments:

Post a Comment