Thursday, 4 August 2016

வேலை வேண்டுமா? - தடய அறிவியல் வேலைக்குத் தயாரா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 28 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 29 அன்று முதல் தயார்நிலையில் உள்ளன.

வயதுத் தகுதி:
01.07.2016 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முஸ்லிம்கள், விதவைகள் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. இந்தப் பிரிவினரைத் தவிர பிறர் 30 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி
தடய அறிவியலில் முதுகலைப் பட்டமோ இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்:
நிரந்தரப் பதிவு (One-Time registration) செய்திருப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பிறர் தேர்வுக் கட்டணத்துடன் நிரந்தரப் பதிவுக்கு ரூ.50 சேர்த்துச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விதவைகளுக்கும் கட்டண விலக்கு உண்டு. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி செல்லான் மூலமாகவோ கட்டலாம்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.net / www.tnpscexams.in என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு அக்டோபர் 16 அன்று சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய நாள்கள்:
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.08.2016
எழுத்துத் தேர்வு : 16.10.2016

No comments:

Post a Comment