Wednesday, 6 July 2016

வியாழனின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது நாசாவின் 'ஜூனோ'!

படம்: நாசா

நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழன் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது.

இது, சூரிய குடும்பம், கிரகங்கள் உருவான விதம் உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

வியாழன் கிரகத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் 1.1 மில்லியன் செலவிட்டு ஜூனோ விண்கலத்தைத் தயாரித்தனர்.

இந்த விண்கலம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் விண்வெளி மையத்தில் இருந்து 2011, ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 5 ஆண்டுகளாகப் பயணித்து 290 கோடி கி.மீ. தூரத்தைக் கடந்த இந்த விண்கலம் சமீபத்தில் வியாழன் கிரகத்தின் காந்தப்புலத்தில் வெற்றிகரமாக நுழைந்தது.

இதைத் தொடர்ந்து, வியாழன் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் ஜூனோ விண்கலம் இன்று வெற்றிகரமாக நுழைந்தது. இதை மகிழ்ச்சியுடன் நாசா விஞ்ஞானிகள் கொண்டாடினர்.

வியாழன் கிரகத்தின் வளையங்களிலுள்ள கதிரியக்கத் தன்மை குறித்து ஆராயவும், வியாழன் கிரகம் எப்படி உருவானது, ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் எப்படி இயங்குகிறது என்பது குறித்து ஜீனோ தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment