முந்தைய ஆண்டுகளில் சரியான வருமானத்தை அறிவிக்காதவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தங்கள் வருமானம் குறித்த தகவல்களை அறிவிக்க மத்திய அரசின் வருமான அறிவிப்பு திட்டம் வாய்ப்பினை வழங்குகிறது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வருமான அறிவிப்பு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களால் அறிவிக்கப்பட்ட வருமானத்தின் மேல், 25% வரி, செலுத்தப்பட்ட வரியில் 25% கிருஷி கல்யாண் செஸ், மற்றும் செலுத்தப்பட்ட வரியில் 25% அபராத வரி என மொத்தம் 45% ஒட்டு மொத்த வரி வசூலிக்கப்படும்.
இத்திட்டம் 1 ஜுன், 2016 ல் இருந்து செப்படம்பர் 30, 2016 ஆம் தேதி மற்றும் அபராதம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் நவம்பர் 30, 2016 அன்று அல்லது அதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டும். வருமான விவரங்களை உரிய படிவத்தில் குறிப்பிட்ட இணைய தளத்திலும் மற்றும் அவரவர்களின் வரம்பிற்குட்பட்ட முதன்மை வருமான வரி ஆணையரிடமும் தெரிவிக்கலாம்.
இத்திட்டம் நிதி ஆண்டு 2015-16 மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளுக்கான வெளியிடப்படாத வருமானம், சொத்துக்கள் மற்றும் முதலீடுகளுக்கு பொருந்தும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட வருமானத்தில் குறிப்பிடப்பட்ட சொத்துக்களுக்கு, செல்வ வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வருமான அறிவிப்பு விவரங்கள் குறித்து, வருமான வரி அல்லது சொத்து வரி சட்டத்தின் கீழ் எத்தகைய விசாரணையோ அல்லது மீளாய்வோ நடத்தப்படாது.
மொத்த வரிகள், கூடுதல் வரி மற்றும் அபராதம் ஆகியவற்றை குறித்த நேரத்தில் செலுத்த தவறியமை, தவறான தகவல்களை தெரிவித்தோ, உண்மைகளை மூடி மறைத்தோ வெளியிட்டால் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வருமான விவரங்களை பலனில்லாததாக்கும்.
இத்திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத வருமான விவரங்களை தெரிவிக்காத பட்சத்தில், வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்படும் வருடத்தில் வரிவிதிப்பிற்குள்ளாக்கப்படும். அவர்கள் மீது இதர தண்டனைக்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்கள் வருமான வரித்துறையின் இணையதள முகவரிwww.incometaxindia.gov.in ல் கிடைக்கும். இது தொடர்பான உரிய விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment