Showing posts with label Tattoo. Show all posts
Showing posts with label Tattoo. Show all posts

Saturday, 6 August 2016

'டாட்டூ'வினால் புற்று நோய் அபாயம்!

அழகுக்காக உடல்களில் பலர் செய்து கொள்ளும் "டாட்டூ' அலங்காரங்களால், அவர்களது உயிரையே பறிக்கக் கூடிய புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ரசாயன அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"டாட்டூ' அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் மைகளில் பல மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நச்சுப் பொருள்கள்.
குறிப்பாக சிவப்பு நிறத்தைத் தருவதற்காகப் பயன்படுத்தப்படும் மை மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடியது.
இதனால் தோலில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
அதிகபட்சமாக, "டாட்டூ' மைகளின் நச்சுத் தன்மையால் உயிரைக் குடிக்கும் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த மைகளால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஏராளமான ஆய்வு முடிவுகளில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ரசாயன அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் "சன்' நாளிதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.