Showing posts with label Multi Tasking Staff. Show all posts
Showing posts with label Multi Tasking Staff. Show all posts

Sunday, 21 August 2016

ராணுவ ஆயுதக் கிடங்கில் குரூப் "சி" பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லியில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவ ஆயுதக் கிடங்கில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: SS (Material Assistant) - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது பண்டக மேலாண்மை, பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: LDC - 31
தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tradesman Mate - 30
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff - 07
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: CMD - 01
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும் .

Saturday, 20 August 2016

அஞ்சல் துறையில் பணி: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய அஞ்சல் துறையின் தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்: 
பணி: Postal Assistant - 16
பணி: Sorting Assistant - 07
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
கல்வித்தகுதி: தொழிற்பிரிவு அல்லாத இதர பாடப்பிரிவுகளை முதன்மையாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Postman - 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.
வயதுவரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 15
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் விளையாட்டுத்தகுதி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில்/ சர்வதேச அளவில் பங்கேற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதை Chief Postmaster General, Delhi என்ற பெயரில், புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து தேவையான விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் அல்லது விரைவு ஆஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (R&E),
O/o The Chief Post Master General,
Delhi Circle,
Meghdoot Bhawan,
NEWDELHI- 110001.
விளையாட்டுத்தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டுத்துறையில் மாநில அளவில், தேசிய அளவில், பல்கலைக்கழக அளவில், சர்வதேச அளவில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2016.
மேலும், வயதுவரம்பு சலுகை, விளையாட்டுத் தகுதிகள் தொடர்பான தகவல்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Saturday, 13 August 2016

வருமான வரித்துறையில் எம்டிஎஸ், வரி உதவியாளர் பணி: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய வருமான வரித்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 10 எம்டிஎஸ், வரி உதவியாளர், ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
பணி: Inspectors of Income tax (PB-II) - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
பணி: Tax Assistants(PB-1) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Multi Tasking Staff - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரையல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.incometaxindia.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 To Deputy Commissioner of Income-tax (Hq) (Admn) O/o
The Principal Chief Commissioner of Income-tax, Kerala,
C.R Building, I.S Press Road Kochi 682 018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.incometaxindia.gov.in/news/kochi-sports-recruitment-10-08-2016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.