Thursday, 18 August 2016

துணை ராணுவத்தில் 1206 கான்ஸ்டபிள் பணி

இந்திய ராணுவத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக மத்திய ராணுவ துணை அமைப்புகள் செயல்படுகின்றன. எல்லைக்காவல் படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), மத்திய ஆயுதப்படை (சி.ஆர்.பி.எப்.), சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.), இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை (ஐ.டி.பி.பீ.), அசாம் ரைபிள் போன்ற படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது மேற்கண்ட படைப்பிரிவுகளில் கான்ஸ்டபிள் (கிரவுண்ட் டியூட்டி) பணியிடங்களுக்கான 1206 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 206 பெண்கள் பணியிடங்களும், ஆண்- பெண் கலந்த படைப் பிரிவுகளில் 1000 பணியிடங்களும் அடங்கும். வயது வரம்பு: 01.08-2016 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும்ம் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
24.08.2016 முதல் 02.09-2016 வரை நடைபெறும் நேரடி ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இது பற்றிய விரிவான விவரங்களை www.bsf.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment