புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளன. புதிய வடிவமைப்பு முறையை ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் பரிந்துரை செய்தது.
புதிய நோட்டுகள் அச்சடிப்பது மற்றும் அவற்றின் எண்கள் வரிசை தொடர்பாக மத்திய வாரியம் அரசுடன் விவாதித்து அதன்படி அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த ரூபாய் நோட்டுகள் விரை வில் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
மும்பையில் ரிசர்வ் வங்கி கவர் னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 557வது இயக்குநர் கூட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மற்றும் பேரியல் பொருளாதார சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எந்தெந்த தளங்களில் ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டியிருக்கும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வங்கிகளின் செயல்பாடு, நிர் வாக செயல்பாடுகளுக்கு ஆதார மான புள்ளி விவர தகவல்கள், வங்கிச் சேவையில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகார்கள், கரன்சி நிர்வாகம் மற்றும் செயல் பாடு ஆகியனவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment