Monday, 30 May 2016

ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தகவல்

பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் | கோப்புப் படம்

வருகிற ஜூன் மாத இறுதியில் ஒரே முறையில் 22 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்க இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடை பெற்ற கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண்குமார், விக்ரம் சாராபாய் ஏவுதள மையத்தின் இயக்குநர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்திய விண் வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவர் கிரண் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோவின் சார்பாக வருகிற ஜூன் மாத இறுதியில் ஒரே முறையில் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறோம். இதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஒரே முறை யாக அதிகபட்சமாக‌ 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருந்தோம். தற்போது 22 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்துவதன் மூலம் இஸ்ரோ புதிய சாதனையை படைக்க இருக்கிறது.இந்த 22 செயற்கைக்கோள்களில் 3 இந்தியாவைச் சேர்ந்தவை. மற்ற 19 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, கனடா, இந்தோனேசியா, ஜெர் மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவை. 22 செயற்கைக்கோள் களையும் பி.எஸ்.எல்.வி. சி.34 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment