Sunday, 15 May 2016

வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு இல்லாதவர்கள் 10 மாற்று ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு கையில் இல்லாத நிலையில் 10 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்தல் நடத்தை விதிகளின் கீழ், வாக்காளர் அட்டை அளிக்காதவர்கள், வாக்களிக்க அனுமதி மறுக்கப்படலாம். தற்போது புகைப்பட வாக்காளர் சீட்டு, வீடு வீடாகச் சென்று வாக் காளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் கள் இடம்பெற்று, வாக்களிப்பின் போது, வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு அளிக்க இயலாதவர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் வகையில் 10 வகையான மாற்று ஆவணங்களைக் காட்டி வாக் களிக்கலாம்.
அதாவது பாஸ் போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment